பெண்ணிடம் சிக்கிய "வக்கீல் ஜோடி"உண்மைய சொல்லாமல் இருக்க பல லட்சம்.. சென்னையில் பகீர் சம்பவம்

x

சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த நந்தினி, தனது கணவர் பிரசாந்திற்காக, வால்டாக்ஸ் சாலையில் உள்ள தனியார் ஷோரூமில் புதிய இருசக்கர வாகனம் ஒன்றை தவணை முறையில் வாங்கியுள்ளார். மூன்று மாதங்களுக்குள்ளாக பழுது ஏற்படவே, ஷோரூமில் முறையான பதில் அளிக்காததாலும், வாகனம், ஆவணங்களை ஷோரூமில் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஜேசுதாஸ், ஸ்ரீப்ரியா வழக்கறிஞர் தம்பதியை அணுகியுள்ளனர். வழக்கு தொடர்ந்ததாக கூறிய வழக்கறிஞர், போலி ஆவணத்தையும், நீதிபதி பெயரை பயன்படுத்தி 4 லட்சத்து 25 ஆயிரத்திற்கான போலி உத்தரவையும் தயார் செய்து வழங்கியதாக கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த நந்தினி, நீதிமன்றத்தில் விசாரித்ததில் அவை போலி என்பது தெரியவந்தது. இதனை தெரிந்துகொண்ட வழக்கறிஞர், தான் தவறு செய்து விட்டதாகவும் , அதனை மறைக்க பல லட்ச ரூபாய் தருவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது கணவர் ஜேசுதாஸ் மிரட்டும் தொனியில் பேசியதாகவும், இதுகுறித்து கமிஷனர் அலுவலகம் மற்றும் பார் கவுன்சிலில் புகாரளித்துள்ளதாகவும் நந்தினி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்