தொடங்கிய மீன்பிடி தடைகாலம்...மும்முரமாக பணியை தொடங்கிய மீனவர்கள்

x

#TnFisherman | #ramanathapuram

தொடங்கிய மீன்பிடி தடைகாலம்...மும்முரமாக பணியை தொடங்கிய மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தடைகாலம் தொடங்கியதை அடுத்து, சுமார் 2500க்கும் மேற்பட்ட விசை படகுகளை கரைக்கு கொண்டு வந்து பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டு தோறும் ஏப்ரம் 15 ஆம் தேதியிலிருந்து ஜூன் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் காலங்களாக மீனவர்கள் கருதுகின்றனர். இந்த காலங்களில் அரசு சார்பாகவே, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மற்றும் கீழக்கரை பகுதிகளில் மீன்பிடி தடை காலம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இந்த இரண்டு மாத விடுமுறையை பயன்படுத்தி, தங்களின் மீன்பிடி வலைகள் மற்றும் படகுகளை இயந்திரம் மூலம் கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் அதனை பழுது பார்க்கும் வேலைகளில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மேலும், இந்த மீன்பிடி தடை காலமான 61 நாட்களில், ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள பெரும்பாலான மீனவர்கள்.. கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்