ஊர் முன்னிலையில் சமூக ஆர்வலருக்கு நேர்ந்த கதி - அதிரவைக்கும் வீடியோ

x

புதுக்கோட்டை அடுத்த தொண்டைமான் ஊரணியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் தாமரைச்செல்வி பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக துணை தலைவர் ரமேஷ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் சமூக ஆர்வலராக செயல்படும் அண்ணா நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவர், கணக்கு கேட்டதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஊராட்சி மன்றத் தலைவரின் உறவினர்கள், விஜயகுமாரை தாக்கி விரட்டிய அடித்துள்ளனர். இதில், பலத்த காயமடைந்த விஜயகுமார், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்