போலீசார் காட்டிய வேற முகம்..இரண்டாக உடைந்த பிரபல ரவுடியின் குடும்பம்..பாரம் தாங்காமல் மனைவி எடுத்த

x

வட சென்னை, காசிமேட்டை சேர்ந்தவர் சுஜிதா. இவர் பிரபல ரவுடியான வெள்ளை சூர்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒருவர் உள்ளார். இந்நிலையில், 2 கொலை வழக்குகள் மற்றும் போதை பொருள் விற்பனை போன்ற வழக்குகளில் சிக்கிய வெள்ளை சூர்யாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், தனது மாமியார் மற்றும் வெள்ளை சூர்யாவின் சகோதரருடன் சுஜிதா கூட்டாக வசித்து வந்த நிலையில், இவர்களின் குடும்பத்தை போலீசார் மிரட்டி நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. வெள்ளை சூர்யாவின் தாயார் மீது போலீசார் பொய்வழக்குகள் பதிந்து சிறையில் அடைத்ததாகவும், பின்பு வெளியே வந்த அவர் போலீசாருக்கு பயந்து வியாசர்பாடியில் தனியே தங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கணவரின் சகோதரனுடன் வசித்து வந்த சுஜிதாவை போலீசார் தவறாக சித்தரித்து, ஆபாசமாக பேசியதாக கூறப்படும் நிலையில், சுஜிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்கொலைக்கு முன்பு அவர் பேசிய செல்போன் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்