18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடம்..! நீதிபதி அதிரடி உத்தரவு

x

தமிழகத்தில் 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கான திருத்திய தேர்வு பட்டியலை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள டி.என்.பி.எஸ்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது

தமிழகத்தில் காலியாக இருந்த 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த 18 பணியிடங்களில், 4 பணியிடங்கள் ஏற்கனவே ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. அது பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டது.

இதை எதிர்த்து ர்மல்குமார் என்பவர் உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தேர்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும் ஆசிரியர் மற்றும் பொது பிரிவினருக்கு என தனித்தனியாக தேர்வுப் பட்டியலை மாற்றியமைத்து 4 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தற்போது பணியில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணயை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும் , திருத்திய தேர்வு பட்டியலை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுமதியளித்த நீதிபதிகள், இறுதி முடிவுகளை வெளியிடக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்