"அலட்சியத்தால் அநியாயமாக பறிபோன பிஞ்சு உயிர்" - மறியலில் குதித்த பொதுமக்கள்

x

அலட்சியத்தால் அநியாயமாக பறிபோன பிஞ்சு உயிர்" - மறியலில் குதித்த பொதுமக்கள்

ஓமலூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி சிறுவன் உயிரிழந்த நிலையில், மின்சார வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் மல்லகவுண்டனூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மின்சாரம் வழங்குவதற்காக சாலையோரத்தில் பாதுகாப்பற்ற முறையில் மீட்டர் பெட்டியும் மோட்டாரும் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மின் மீட்டர் அருகே விழுந்த பந்தை எடுப்பதற்காக சென்ற லிங்கேஸ்வரன் மீன்சாரம் தாக்கி உயிரிழந்தான். இதனை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார வாரியத்தின் அலட்சியப் போக்கு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்