பரபரப்பை கிளப்பிய பெண்மணி - அமைச்சருக்கே பறந்த புகார் - ஆதாரத்தோடு எச்சரித்த ரயில்வே

x

பரபரப்பை கிளப்பிய பெண்மணி - அமைச்சருக்கே பறந்த புகார் - ஆதாரத்தோடு எச்சரித்த ரயில்வே

ரயில் பெட்டிகளில் கூட்டம் இருப்பதாக தவறான வீடியோக்களை பதிவிட வேண்டாம் என, பயணிகளுக்கு ரயில்வே துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 14-ஆம் தேதி காசி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டாம் வகுப்பு ஏசி முன்பதிவு பெட்டியில், நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் இருப்பதாக பயணி ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். மேலும் முன்பதிவு செய்த பயணி ஒருவர், கூட்டத்தால் கதவை திறக்க முடியாமல் கண்ணாடியை உடைத்ததாகவும் கூறப்பட்டது. இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் 6 நாட்களுக்கு பின் எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ள ரயில்வே நிர்வாகம், சமீபத்தில் அந்த ரயிலில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில் புகாரில் கூறியதுபோல் காசி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூட்டம் இல்லை என்றும், ரயிலில் கண்ணாடி உடைந்தது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் பழைய வீடியோக்களை தவறாக பதிவிட்டு ரயில்வே துறையை களங்கப்படுத்த வேண்டாம் என்றும், பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்