மோடி பேரணியில் பள்ளி குழந்தைகள் விவகாரம் - வழக்கு ஒத்திவைப்பு

x

கோவையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற பிரதமர் மோடியின் சாலைப் பேரணியில், பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கச் செய்ததாக தனியார் பள்ளி மீது சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கின் விசாரணைக்கு தடை கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும், தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களில், பிரதமர் மோடியை வரவேற்பதற்காக, 22 மாணவர்களின் பெற்றோரிடம் அனுமதி பெற்றே, அவர்களை பேரணிக்கு அழைத்துச் சென்றதாகவும், மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு தள்ளிவைத்தார்..


Next Story

மேலும் செய்திகள்