பெண் கார்டரின் தலையில் கத்தி வைத்த சிறுவன் - அதிர்ச்சியில் உறைந்த மதுரை ரயில் நிலையம்

x

பெண் கார்டரின் தலையில் கத்தி வைத்த சிறுவன்

அதிர்ச்சியில் உறைந்த மதுரை ரயில் நிலையம்

மதுரையில், பெண் ரயில்வே கார்டரிடம் வழிப்பறி செய்த சம்பவத்தில் சிறுவனை போலீசார் கைது செய்தனர். மதுரை ரயில் நிலையத்தில், திண்டுக்கல் - நெல்லை ரயில் பெட்டியில் கார்டராக இருந்த கேரளாவை சேர்ந்த ராக்கி என்ற பெண் அதிகாரியை, கத்தியால் தலையில் தாக்கி, செல்போன் மற்றும் 500 ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணையில், செல்லூர் பகுதியை சேர்ந்த சிறுவனை போலீசார் கைது செய்த நிலையில், தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்