போலி ஆவணம்..போலி வேலை.. - பின்னணியில் பயங்கர பிளான்...கோடிகளை சுருட்டிய கும்பல்

x

59 தொழிலாளர்கள் நிறுவனத்தில் வேலை செய்வதாக போலி ஆவணங்களை கொடுத்து, தனிநபர் கடன் பெற்று மோசடி செய்த, 3 பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஐசிஐசிஐ வங்கி முதன்மை மேலாளர் ரங்கநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், போலியான வங்கி கணக்கை தொடங்கி, கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடனாக 3 கோடியே 57 லட்ச ரூபாயை சதிஷ் செல்வராஜ், தனசேகர், ஜவகர் பெருமாள், சதிஷ் குமார், கார்த்திக், சசிரேகா, மகாலட்சுமி, மற்றும் சர்மிளா ஆகிய 8 பேரும் வாங்கியதாக கூறியுள்ளார். அந்த கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில், 8 பேரும் வங்கியை ஏமாற்றும் நோக்கில் வங்கி ஊழியர் உதவியுடன், ஐஆர்எஸ் மெட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் போலியான சம்பள கணக்கை தொடங்கி, ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸ், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்