இரு பிரிவினரிடையே பயங்கர தாக்குதல்..காவல்துறை செயலால் மக்கள் செய்த காரியம்

x
  • திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஒரு பிரிவினரை சேர்ந்த 2 பேரை, மற்றொரு பிரிவினர் தாக்கிய நிலையில், புகார் வாங்க மறுத்த போலீசாரை கண்டித்து, சாலை மறியல் நடைபெற்றது.எஸ்.பாறைப்பட்டியில் இரு பிரிவினர்கள் வசித்து வருகின்றனர்.
  • தெற்கு தெருவில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்கு, இதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த
  • பகுதியைச் சேர்ந்த, ஜீவா,அருண் ஆகியோருக்கும் கண்ணனுக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில், வியாழக்கிழமை இரவு, ஜீவா, அருண் ஆகிய இருவரையும், கண்ணன் உள்ளிட்ட வேறு பிரிவை சேர்ந்த, சுமார் 10-க்கும் மேற்பட்டோர், தாக்கியதாக கூறப்படுகிறது.
  • இதில் பலத்த காயம் அடைந்த, ஜீவா மற்றும் அருண் ஆகிய இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • இதுகுறித்து செம்பட்டி காவல் நிலையத்தில், புகார் செய்துள்ளனர். ஆனால், போலீசார் புகார் வாங்க மறுத்ததால், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தெற்கு தெரு பொதுமக்கள், செம்பட்டி - பழனி சாலையில் எஸ்.பாறைப்பட்டியில் இரவில் மறியலில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்