திடீரென நடுரோட்டில் படுத்து போராட்டம்-தர தரவென இழுத்து சென்ற போலீஸ்-நாகர்கோவிலில் பதற்றம்

x

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வீட்டுமனை பட்டா கேட்டு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. சாலை மறியலால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், போலீசார் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி களைத்தனர். மேலும் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் குண்டுகட்டாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெண்கள் உட்பட 160 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 9 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்