"கோரிக்கைகளை முதல்வர் பரிசீலிக்க வேண்டும்"...அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர்

x

வரும் 26 ஆம் தேதி தொடங்க உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டங்களை நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டம், சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை முதலமைச்சர் பரிசீலனை செய்து, வரும் 19ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் , திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்