திடீரென நிறம் மாறிய தாமிரபரணி..அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்..

x

மேலநத்தம் பகுதியில் பாய்ந்தோடும் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால், தண்ணீர் மாசு அடைந்துள்ளது. கருப்பு நிறத்தில் இருக்கும் அந்த தண்ணீரை குடிப்பதால், மஞ்சள் காமாலை, டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தாமிரபரணி ஆற்றுநீர் மாசு அடைவதை தடுக்க நெல்லை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என மேலநத்தம் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்