`வட்டிக்கு குட்டி' - அபேஸான 8 கோடி.. களமிறங்கிய போலீஸ் கடைசியில் விஸ்ட்

x

மதுரை கே.கே. நகரை தலைமையாக கொண்டு எஸ்.எம்.சி கூட்டுறவு வீட்டு வசதி சொசைட்டி என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. திண்டுக்கல், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கிளைகளை துவக்கி, பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்தால், அதிக வட்டியுடன் முதிர்வு தொகை தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளது. இதை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி பணத்தை திருப்பித் தராத‌தால், 8 கோடி ரூபாய் மோசடி செய்த‌தாக 222 பேர் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், மேட்டுப்பாளையத்தில் தலைமறைவாக இருந்த நிதி நிறுவனத்தின் சேர்மன் விஜய் கிருஷ்ணனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள துணை சேர்மன் சாந்தினி பிரியாவை தேடி வருகின்றனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சோதனை செய்து, ஆவணங்கள் மற்றும் சொத்துக்களை கைப்பற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் அசல் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என்றும் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்