ஒரு நிமிடத்தில் 39 முறை சுழற்றி உலக சாதனை.. இளைஞருக்கு குவியும் பாராட்டுக்கள்..

x

கொடைக்கானலில் இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்து பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். மூஞ்சிக்கல் பகுதியை சேர்ந்த இளைஞர் பிரசன்னா, கடந்த மாதம் FIDGET SPINNER என்று அழைக்கப்படும் சுழலியை விரலில் வைத்து ஒரு நிமிடத்தில் 39 முறை சுழற்றி அதனை வீடியோவாக பதிவு செய்து கின்னஸ் உலக சாதனை வழங்கும் அமைப்பினருக்கு அனுப்பி வைத்தார். இதனை அங்கீகரித்து பிரசன்னாவிற்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்