திடீரென மயங்கி விழுந்தால்..என்னவெல்லாம் செய்ய வேண்டும்..?காவலர்களுக்கு அளிக்கப்பட சிறப்பு பயிற்சி

x

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கு மருத்துவம் சார்ந்த முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.

கூட்டம் நிறைந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது திடீரென மயங்கி விழும் நபருக்கு முதலுதவி அளிப்பது, ஆம்புலன்ஸ் வரும் வரை, மூளை மற்றும் இருதயத்தை செயலிழக்காமல் வைத்துக்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர். இப்பகுதியில் மூடுபனி நிலவிய போதிலும், பயிற்சியை காவலர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொண்டனர். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், போக்குவரத்து காவலர்கள் என 250 பேர் இதில் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்