கோடிக்கணக்கில் மோசடி செய்த நிதிநிறுவனம்! முன்னாள் ராணுவ வீரர் விபரீத முடிவு! போராட்டத்தில் ஊர்மக்கள்

x

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் முன்னாள் ராணுவ வீரர் மரணத்திற்கு காரணமான நிதி நிறுவன உரிமையாளரை கைது செய்ய கோரி உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். நிதி நிறுவனம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததால் விரக்தியில் முன்னாள் ராணுவ வீரர் அந்தோணிசாமி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சூழலில், முறைகேட்டில் ஈடுபட்ட நிதி நிறுவன அதிபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்