"ஷேவ்" செய்ய சொன்ன நிர்வாகம் காஷ்மீரிலிருந்து முதலமைச்சருக்கு பறந்த கடிதம்

x

செங்கல்பட்டு அரசு செவிலியர் கல்லூரியில் தமிழகம் மற்றும் காஷ்மீர் மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு செய்முறை தேர்வு இருப்பதால், தாடியை ஷேவ் செய்துவிட்டு வருமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, காஷ்மீர் மாணவர் சங்கத்திற்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட காஷ்மீர் மாணவர்கள், தாடியை எடுக்க நிர்ப்ப‌ந்திப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள காஷ்மீர் மாணவர் சங்கம், தாடி வளர்ப்பது தனிநபரின் அடிப்படை சுதந்திரம் என்றும், இது மாணவர்களை ஒதுக்கிவைக்கும் சூழலை உருவாக்குவதாகவும் குற்றம்சாட்டிருந்த‌து. இதைத் தொடர்ந்து, செவிலியர் கல்லூரி விடுதிக்கு சென்ற காவல்துறையினர், மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பாஸ்கர், தாடியை எடுக்க சொல்வதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்றும், பல்கலைக்கழக வழிகாட்டு நெறிமுறைபடியே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்