தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி சென்னையில் 62 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

x

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெற்கு மண்டலத்திற்கும், தெற்கு மண்டல ஐஜி நரேந்திர நாயர் வடக்கு மண்டலத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், சென்னையில் 62 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, 35 காவல் ஆய்வாளர்கள் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தேர்தலை முன்னிட்டு, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் காவலர்களையும், சொந்த ஊரில் பணியாற்றும் காவலர்களையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற, தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்