முடிவுக்கு வராத விஜயலட்சுமி புகார்.. 'காவல் நிலையம் வரப்போகும் சீமான்..' -காத்திருக்கும் "டுவிஸ்ட்"

x

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை காவல்நிலையத்தில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக போலீசார் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்திய நிலையில், வரும் 18ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இதனிடையே, சீமான் மீதான புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், போலீசார் அனுப்பிய சம்மனை அடுத்து, நாளை காலை 10 மணியளவில், தனது வழக்கறிஞர் சங்கர் என்பவருடன், சீமான் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, தன்னைப் பற்றி அவதூறாக பேசினால், தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி மீது மான நஷ்ட வழக்கு தொடர நேரிடும் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்