சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போது பயங்கரம் - நடுரோட்டில் அதிர்ச்சி சம்பவம்

x

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் யு டியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை இன்று அதிகாலை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து காவல்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்... அங்கு அவரிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு பின்னர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது...

தேனியில் இருந்து சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த ஐடிஐ கார்னர் புறவழிச்சாலை பகுதியில் விபத்து ஏற்பட்டது... போலீஸ் வாகனமும், கார் ஒன்றும் மோதி விபத்து நிகழ்ந்த நிலையில், இதில் சவுக்கு சங்கர் மற்றும் 2 காவலர்கள் படுகாயமடைந்தனர்... உடனடியாக படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்