திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா - கோயில் முழுவதும் அதிரடி சோதனை

x

சனிப்பெயர்ச்சி திருவிழாவை ஒட்டி திருநள்ளாறு கோயில் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். சனிப்பெயர்ச்சி விழாவை ஒட்டி, திருநள்ளாறுகோயிலுக்கு 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கோயில் வளாகம், சனி பகவான் சன்னதி, நளன் குளம், பக்தர்கள் தங்குமிடம் என கோயில் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். காரைக்காலில் 500 போலீசார், புதுச்சேரியில் இருந்து ஆயிரம் போலீசார் என ஆயிரத்து 500 போலீசார், 3 நாட்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்