“அப்பாவோட படம் எதும் ரிலீஸாகல...“ இப்ப நா வந்துடேன்.. டைரக்டரான மகள் தந்தையின் கனவை நிறைவேற்றிய சிறுமி

x

சேலத்தில் அரசு பள்ளி மாணவி முழு நீள திரைப்படத்தை இயக்கி அனைவரையும் அசர வைத்துள்ளார்... இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

பள்ளி பருவத்தில் நம்மில் பலருக்கு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவு இருந்திருக்கும்... அந்த கனவை பள்ளியில் படிக்கும்போதே நனவாக்கியுள்ளார் சேலத்தை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி பிரஹிமா...

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத். திரைப்பட உதவி இயக்குநராக பணிபுரிந்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளான பிரஹிமா பொன்னம்மாபேட்டை அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், தந்தையுடன் இணைந்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற சிறுமி பிரஹிமாவிற்கு, திரைப்பட இயக்குநராக ஆக வேண்டும் என்ற ஆசை பற்றிக் கொண்டது...

பிரஹிமா, அரசுப் பள்ளி மாணவி

தொடர்ந்து தந்தையிடம் சினிமா கற்ற சிறுமி பிரஹிமா, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் "கமலியின் எதிர்காலம்" என்ற தலைப்பில் முழு நீள திரைப்படத்தை இயக்கி அசத்தியுள்ளார்...

பிரஹிமா, அரசுப் பள்ளி மாணவி

தொடர்ந்து படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைக்க பெற்று, படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். படம் இயக்குவதற்காக ஒரு வாரம் எடுத்துக் கொண்டதாக தெரிவித்த பிரஹிமா, பள்ளிப் படிப்பையும் தொடர்வதாக கூறினார்...

பிரஹிமா, அரசுப் பள்ளி மாணவி

இந்நிலையில், திரைத் துறையில் தன்னால் சாதிக்க முடியாததை மகள் மூலம் செய்து வருவதாக பிரஹிமாவின் தந்தை பிரசாத் தெரிவித்தார். மேலும், அரசு பள்ளி மாணவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் இப்படத்தை எடுத்து முடித்துள்ளதாகவும் கூறினார்...

பிரசாத், சிறுமியின் தந்தை

மேலும் இப்படம் வெளியாவதில் சில சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்த பிரசாத், தமிழ்நாடு அரசு சார்பில் உதவியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

பிரசாத், சிறுமியின் தந்தை

இந்நிலையில், பல்வேறு தடைகளை தாண்டி படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ள சிறுமி பிரஹிமா, படத்தின் ரிலீஸ் குறித்து ஆவலோடு காத்திருக்கிறார்.

அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு துறைகளில் வெற்றிக் கொடி நாட்டிவரும் இந்த சூழலில், தடைகளை உடைத்து வெற்றி இயக்குநராக பிரஹிமா மகுடம் சூடுவார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்