ஆர்எஸ்எஸ் பேரணி... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

சுதந்தர தினம், விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அனுமதி கோரியிருந்தது. ஆனால் அனுமதி மறுக்கப்படவே, அதனை எதிர்த்து அந்த அமைப்பு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிமன்றம், அணிவகுப்புக்கு அனுமதி வழங்கும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டது. அப்போது அணிவகுப்புக்கு சில நிபந்தனைகளை விதித்த உயர்நீதிமன்றம், உள்ளூர் நிலவரங்களை பொறுத்து மாவட்ட நிர்வாகமும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என தெரிவித்தது. இந்தநிலையில் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடைக்கோரி, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்