ரூ. 10 கோடிக்கு மான நஷ்ட ஈடு.. அப்பாவு-க்கு பறந்த நோட்டீஸ்

x
  • அதிமுகவை பற்றியும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பற்றியும் அவதூறு பேசியதாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவிடம் 10 கோடி ரூபாய் கேட்டு அதிமுக சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர், 40 உறுப்பினர்கள் ஆதரவு தர தயாராக இருப்பதாக தன்னிடம் கூறினார் என்று அப்பாவு அண்மையில் பேசிய காணொளி வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி பேதமற்ற நடுநிலையாளராக விளங்க வேண்டிய சபாநாயகர், ஆளும் தரப்பின் பிரதிநிதியாக, பேசியிருப்பது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் மானநஷ்ட வழக்கு கொடுப்பதற்கு முகாந்திரம் இருப்பதாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
  • இந்த பேச்சுக்கு பொது வெளியில் 48 மணி நேரத்திற்குள்ளாக வருத்தம் தெரிவித்து அப்பாவு தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், இந்த மன உளைச்சலுக்கு மான நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
  • தவறினால் அவர் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடுப்பதற்கு உண்டான முகாந்திரம் இருப்பதாக கருதி, உரிய நீதிமன்றங்களில் அதற்கு உண்டான முன்னெடுப்பு எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் ஆர்.எம்.பாபு முருகவேல் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்