ராமர் கும்பாபிஷேகம் - "முதல் தீபத்தை நாங்க தான் ஏற்றினோம்"...உண்மையை உடைத்த தமிழக தம்பதியினர்

x

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டது தீபாவளி கொண்டாடியதுபோல் இருந்ததாக, ஆர்.எஸ்.எஸ் மாநிலத்தலைவர் ஆடலரசன் தெரிவித்தார். ராமர் கோயில் விழாவில் பங்கேற்க, நாடு முழுவதிலும் இருந்து 16 தம்பதியர் பங்கேற்ற நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆடலரசன் மற்றும் அவரது துணைவியார் லலிதா பங்கஜவல்லிக்கு அழைப்பு விடப்பட்டது. இந்நிலையில், விழாவில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பிய தம்பதியருக்கு தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் சேதுபதி மன்னர் அரண்மனையில் ராமநாதபுரம் ராணி ராஜேஸ்வரி நாச்சியார் வரவேற்பு அளித்தார். ஆடலரசன், சேதுபதி மன்னர் பாஸ்கர சேதுபதியின் கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்