மூன்று ஆடுகளை அப்படியே விழுங்கிய மலைப்பாம்பு... உசிலம்பட்டியை உலுக்கிய அனகோண்டா!

x

உசிலம்பட்டி அருகே மூன்று ஆடுகளை மலைப்பாம்பு விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மூன்று ஆடுகளை மலைப்பாம்பு விழுங்கி நிலையில், நகர முடியாமல் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், மலைப்பாம்பை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், ஆடுகள் செரிமானம் ஆன பின்னர், பாம்பு எடை குறைந்து வனப்பகுதிக்குள் சென்று விடலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்