தமிழகம் முழுவதும் தொடங்கிய தபால் வாக்கு பதிவு | Postal Vote

x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட தபால் ஓட்டு பதிவு செய்யும் பணி நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டம் காமராஜ் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ஓட்டு பதிவு செய்யும் பணி நடைபெற்றது. தபால் ஓட்டுக்கான விண்ணப்பம் வழங்கப்பட்ட நிலையில், மூடிய கவரில் வைத்து சீல் இடப்பட்ட பெட்டியில் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். ஆரணி தொகுதியில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று வாக்குகள் பெறப்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில், மதியத்திற்கு மேல் தபால் வாக்கு பதிவு செய்யும் பணி துவங்கி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் பாபநாசத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் தபால் ஓட்டு பதிவு செய்யும் பணி நடைபெற்றது. மேலும் தமிழகத்தின் பல இடங்களில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்