"ஹெல்மெட் அணிந்தால்.. ஃப்ரீயா பூண்டு" - இன்ப அதிர்ச்சி கொடுத்த போலீஸ்

x

தஞ்சையில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு விலையில்லா பூண்டு வழங்கி வாகன ஓட்டிகளைக் காவல்துறையினர் இன்ப அதிர்ச்சி அளித்தனர். பூண்டு இதயத்தைக் காக்கும், தலைக்கவசம் தலைமுறையை பாதுகாக்கும் என்ற தலைப்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. தஞ்சை நகர உட்கோட்ட போக்குவரத்து ஒழுங்கு பிரிவு மற்றும் தனியார் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் அவ்வழியே பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்க 50 வாகன ஓட்டிகளுக்கு தலா 1 கிலோ பூண்டு விலையில்லாமல் வழங்கப்பட்டது... தற்போது ஒரு கிலோ பூண்டு 500 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகும் நிலையில் பூண்டு விலையில்லாமல் வழங்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்