யார் பிரதமராக வரவேண்டும்..? ஓப்பனாக உடைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

x

சென்னை அன்பகத்தில் கடலூர், ராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் என கூறப்படுவதால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என குறிப்பிட்டார். எதிர்கட்சியாக இருக்கும் போதே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வென்றதால், வருகிற தேர்தலில் ஒரு சதவீதம் கூட வாக்குகள் குறையக்கூடாது என தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் கை காட்டும் நபர் தான் பிரதமராக வேண்டும் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தல் வெற்றி தான் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அடித்தளம் என குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்