காருக்கு பின்னால் விழுந்த குச்சி.. ஊதி பெரிதாக்கிய ஆளுநர் மாளிகை.. பழைய சம்பவம்..புதிய வீடியோ ஆதாரம்

x

ராஜ்பவனில் நடந்த பெட்ரோல் வெடிகுண்டு சம்பவத்தில், ஆளுநர் மாளிகையின் குற்றச்சாட்டை மறுத்து, காவல்துறை உயரதிகாரிகள் ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

சென்னையில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கருக்கா வினோத் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில், 2 வேறு சம்பவங்களை மேற்கோள்காட்டி, தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டை முன்வைக்க விவகாரம் மேலும் சூடுபிடித்தது.

இந்த விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ஏடிஜிபி அருண் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இருவேறு சம்பவங்களில் தமிழக காவல்துறை மீது ஆளுநர் மாளிகை வைத்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என மறுத்த அதிகாரிகள், உண்மையில் நடந்தது என்ன? காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை, சிசிடிவி காட்சியுடன் ஆதாரத்ததுடன் விளக்கமளித்ததுள்ளனர்.

அப்போது பேசிய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை சிசிடிவி காட்சிகளுடன் விளக்கமளித்தார்.

அதில், கைது செய்யப்பட்ட கருக்கா வினோத், ஆளுநர் மாளிகை நோக்கி நடந்து வருவதும், பின்னர் திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியுள்ளான்.


Next Story

மேலும் செய்திகள்