உடல் உறுப்பு தானம் - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல் | masubramanian

x

நாட்டிலேயே இந்தாண்டும் உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழகம் முதலிடத்தை தக்க வைக்கும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த இளைஞர் ராமமூர்த்தி உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய 7 ஆயிரத்து 22 பதிவு செய்திருப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்