2 மணி நேரத்தில் ஊட்டியை புரட்டி போட்ட பேய் மழை... திடீரென பெரும் அருவியாக மாறிய காட்டேரி

x

ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், பர்னில், எல்கில் பகுதியில் இருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு வரும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, அப்போது பொதுமக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து, தகவலறிந்து வந்த நகராட்சி நிர்வாகத்தினர் ஜேசிபி உதவியுடன் மண் சரிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்