சடலமாக கிடந்த மூதாட்டி.. மிரண்டுபோன அக்கம்பக்கத்தினர்... - சென்னை அருகே பரபரப்பு

x

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் வேல்நகரில் 70 வயது மூதாட்டி ராஜம்மாள் தனியாக வசித்து வந்தார். இவர் நேற்று வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், அவர் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பீர்க்கன்காரணை போலீசார் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டியை கொலை செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்