அணு மின்சக்தி துறையில் கால் பதிக்கும் என்எல்சி - வெளியான முக்கிய தகவல்

x

என்.எல்.சி இந்தியா நிறுவனம் அதன் நிலக்கரி சுரங்கங்களில் சிறிய மாடுலர் அணு உலைகளை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேக்-இன் இந்தியா திட்டத்தில் சுரங்க இயந்திரங்கள் தயாரிப்பது குறித்து, கோல் இந்தியா நிறுவன தொழில்நுட்ப இயக்குநர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் பேசிய இந்திய நிலக்கரித்துறை செயலாளர், என்.எல்.சி இந்தியா நிறுவனம் அணு மின் சக்தி துறையிலும் கால் பதிக்கவுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய என்எல்சி இந்தியா தலைவர் பிரசன்னகுமார், சிறிய அளவிலான அணு மின்சக்தி நிலையம் அமைப்பது தொடர்பாக, அணு மின் சக்தித் துறையில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களிடமும், இந்திய அணு சக்தி ஆராய்ச்சி நிறுவனங்களிடமும் ஆலோசனை நடத்தி வருவதாக கூறினார். மேலும் அந்த அணு மின்சக்தி நிலையத்திற்காக, தங்கள் நிலக்கரி சுரங்கங்களில் சிறிய மாடுலர் அணு உலைகளை அமைப்பது குறித்து, இந்திய அணுசக்தி கழகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்