பரபரப்பான அரசியல் சூழலில் நீலகிரி செல்லும் ஆளுநர் ரவி

x

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்லும் ஆளுநர் ரவி, கார் மூலம் உதகை ராஜ்பவன் மாளிகைக்கு, மாலை 6 மணியளவில் செல்கிறார். அங்கு தங்கி ஒய்வெடுக்கும் அவர், வெள்ளிக்கிழமையன்று முத்தநாடு மந்துவில் உள்ள தோடர் இன பழங்குடியின மக்களை சந்தித்து உரையாடவுள்ளார். தொடர்ந்து சனிக்கிழமையன்று ஆளுநர் ரவி, நீலகிரியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என தெரிகிறது. பின்னர் 18 ஆம் தேதி உதகை ராஜ்பவனில் இருந்து புறப்படும் அவர், கார் மூலம் கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வரவுள்ளார். ஆளுநர் வருகையையொட்டி, நீலகிரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்