"வரும் திங்களன்று.." - முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்

x

முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடிக் கல்வி போன்ற திராவிட மாடல் அரசின் திட்டங்கள் அனைத்தும், உங்களை வந்து சேர்வதை உறுதிசெய்திட 'கள ஆய்வில் முதலமைச்சர்' என உங்கள் மாவட்டங்களுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

உங்களின் தேவைகளும், அரசின் சேவைகளும் ஒரு குடையின்கீழ் சந்தித்து விரைவில் தீர்வுகள் கிடைத்தால் அது திராவிட மாடலின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் என மின்னிடுமே என்றும் குறிப்பிட்டார். அப்படியான திட்டமாக உருப்பெறும், மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்க திங்களன்று கோவைக்கு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்