நியோமேக்ஸ் மெகா மோசடி.. குவியும் புகார்

x

நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி தொடர்பாக விருதுநகரில் பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் நடைபெற்ற சிறப்பு முகாமில், 30 பேர் மனு அளித்தனர். தென்மாவட்டங்களில் அதிக வட்டி தருவதாக‌க்கூறி மோசடி செய்த‌தாக எழுந்த‌ புகாரை அடுத்து, நியோமேக்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், பணத்தை இழந்தவர்கள் புகார் அளிப்பதற்காக, விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில், 30 பேர், தாங்கள் இழந்த 4 கோடி ரூபாயை மீட்டுத்தருமாறு மனு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்