"பர்தா அணிந்திருந்ததால் ஹோட்டலில் உணவு வழங்கவில்லை.." - உரிமையாளர் கொடுத்த விளக்கம்

x

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள பாபநாசத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற நபர் ஒருவர், அங்குள்ள ஹோட்டலுக்கு குடும்பத்தினருடன் உணவருந்ததாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, குடும்பத்தினர் பர்தா அணிந்திருந்ததை காரணம் காட்டி தங்களுக்கு உணவு வழங்க மறுத்ததாக கூறி அவர் இணையத்தில் பதிவிட்ட பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இது குறித்து விளக்கமளித்த ஹோட்டல் உரிமையாளர் கோபால், தாங்கள் எந்தவொரு பாகுபாடும் காட்டவில்லை என்றும், சந்தேகம் இருந்தால் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை சரிபார்த்துக் கொள்ளும்படியும் தெரிவித்திருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்