தமிழகத்தில் உருவாகிவரும் விண்வெளி மையம் - வெளிவந்த முக்கிய தகவல்

x

கடந்த டிசம்பர் மாதம், நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டபோது, கொக்கிரக்குளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. அந்த மையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, கட்டிடத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கிருந்த கருவிகள் சேதமடைந்தன. இந்நிலையில், அந்த அறிவியல் மையத்துக்கு வருகை தந்த, பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பக் கழகத்தின் தென் மண்டல இயக்குனர் சஜு பாஸ்கரன், சேதங்களை பார்வையிட்டார். அப்போது, அந்த அறிவியல் மையத்தில் 5 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார். தற்போது 70 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும், மாதிரி விண்வெளி மையம் இரண்டு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்