தமிழகத்தை அதிர வைத்துள்ள My V3 Ads விவகாரம்... அதிர வைத்த FIR... திக் திக் கோவை

x

தனியார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம், பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூல் செய்து வருவதாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் MYV3ADS யூடியூப் நிறுவனத்தின் மீதான புகார் குறித்து, கோவை சைபர் கிரைம் போலீசார் பதிவிட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், செல்போன் மூலம் விளம்பரம் பார்ப்பதன் மூலம், அதீத வருமானம் ஈட்டலாம் என பொதுமக்களிடம் பேராசை துண்டிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் செலுத்தும் பணத்திற்கு ஈடாக, ஆயுர்வேத மாத்திரைகளை நிறுவனம் வழங்கி வருவதாகவும், அந்த மாத்திரைகளின் தரம், அதன் மதிப்பு, உபயோகம் குறித்து எந்த தெளிவான தகவலையும், பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவில்லை எனவும், மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் கொடுப்பதற்கு சட்டத்திற்கு புறம்பானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விளம்பரம் பார்ப்பதால் வருமானம் வருவதாக விளம்பரப்படுத்தும் நிறுவனம், வருமானத்தை எந்த அடிப்படையில் கொடுக்கிறார்கள் என்ற விவரம் இல்லை என்றும், தெளிவான விவரங்களைக் குறிப்பிடாமல், பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை தனியார் நிறுவனம் வசூலித்துக் கொண்டிருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்