அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் X தளத்தில் வெளியிட்ட தகவல் | Minister Udhayanithi Stalin

x

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை இன்று ஆய்வு செய்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், அந்தப்பகுதிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருவோர் மற்றும் அவர்களின் குடும்பத்தாரிடம் அங்குள்ள நிலை குறித்து கேட்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வெள்ளம் காரணமாக சிகிச்சை தடைபடாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவமனை பணியாளர்களை கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும், நோயாளிகள் சிகிச்சைக்காக வருகிற போதும், சிகிச்சை முடிந்து திரும்புகிற போதும், அவர்கள் வெள்ள நீரில் சிக்காமல் பாதுகாப்பாக வெளியேறும் வகையில், படகினை வைத்திருக்கும்படி அரசு அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியிருப்பதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்