பொன்னேரி அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு..வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாடல்

x

திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில்அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறைக்குள் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து தலைமை ஆசிரியையிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில்

18 ஆயிரம் வகுப்பறைகள் உள்ளிட்டவை கட்டப்படும் என்று கூறினார். பகுதிநேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு தொடர்பான கோப்புகள் நிதி அமைச்சக ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்