வரிசையாக வந்து விழுந்த கேள்விகள்.. அசராமல் பதில் கொடுத்த மேயர் பிரியா - "முடியவே முடியாது" என திட்டவட்டம்

x

சென்னை மாநகராட்சியில் 1 முதல் 10 மண்டலங்களில் உள்ள தெரு மின் விளக்கு பராமரிப்புக்கு இடெண்டர் புள்ளி ஒப்பந்த நடைமுறை 30 மாதங்கள் என்பதை ஏற்க முடியாது என உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மேயர் பிரியா அந்த தீர்மானத்தை நிறுத்தி வைத்தார்.

மாமன்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்கள்,

மூன்று ஆண்டுகள் தெரு விளக்கு பராமரிப்பு என்பதை ஏற்க முடியாது என்றனர். ஒர் ஆண்டுக்கு தான் வழங்க வேண்டும் என்றும், அதிமுகவினருக்கு வழங்க கூடாது என முழக்கமிட்டனர். உடனே மேயர் பிரியா, இந்த தீர்மானத்தை ஒத்திவைத்து, கூட்டத்தை நிறைவு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்