ஊராட்சி து.தலைவர் குடும்பத்தையே... ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு - உயிரையே மாய்க்க முயன்ற கொடுமை.. ஒன்று கூடி அதிர வைத்த கிராம பஞ்சாயத்தார்கள்

x

ஊர் கட்டுப்பாட்டை மீறி கழிவு நீர் வடிகால் அமைத்ததற்காக, ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கிராம பஞ்சாயத்தார்கள் மீது ஊராட்சி துணைத் தலைவர் புகார் அளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவ கிராமத்தில், நுழைவு வாயில் பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை, ஊராட்சி துணைத் தலைவர் ராஜாத்தி என்பவர் மேற்கொண்டு வந்துள்ளார். இதற்கு அந்தக் கிராமத்து பஞ்சாயத்து சபை நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தும், பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஊர் கட்டுப்பாட்டை மீறியதற்காக, ஊராட்சி துணைத் தலைவர் ராஜாத்தி மற்றும் அவரது குடும்பத்தினரை, கிராம பஞ்சாயத்தார்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். இதனால் மனமுடைந்த அவர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, ஊராட்சி துணைத்தலைவர் ராஜாத்தி, கொக்கிலமேடு மீனவ பஞ்சாயத்து சபை நிர்வாகிகள் 7 பேர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்