"சத்தமே இல்லாமல் குமரியில் உருவாகும் மாஃபியா கும்பல்" - "இது பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும்..."

x

கன்னியாகுமரி மாவட்டத்தில், தோவாளை நெல் விவசாயப் பகுதிகள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களால் முறைகேடாக வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நெற்களஞ்சியமாக காணப்பட்ட தோவாளைப் பகுதி, தற்போது சுருங்கி, சுமார் 12 ஆயிரத்து 800 ஹெக்டேரில் மட்டுமே நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. அங்குள்ள நஞ்சை, புஞ்சை நிலங்களை மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் விதிமுறைகளை மீறி அதிகாரிகளின் உடந்தையோடு, வீட்டுமனைகளாக மாறி, அப்பாவி மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அங்கீகாரம் பெறப்படாத அந்த வீட்டு மனைகளில் மக்கள் வீடு கட்டி குடியேறினாலும், அந்த குடியிருப்புகளுக்கு சாலை, குடிநீர் வசதி போன்றவை ஏற்படுத்தப்படாமல் உள்ளன. இந்த பிரச்சனையில், தமிழக அரசு தனி கவனம் செலுத்திர முறைகேடு பத்திரப்பதிவுக்கு காரணமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்