மதுரையில் ட்ரோன்கள் பறக்கத் தடை - "மீறினால்..." ஆட்சியர் எச்சரிக்கை

x

பிரதமர் மோடி மதுரை வருகையையொட்டி ட்ரோன் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மாநகர எல்லைக்குள் 27-ம் தேதி முதல் 28ம் தேதி வரை ட்ரோன் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 2 நாட்களில் தடையை மீறி ட்ரோன் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரித்துள்ளார். மதுரையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ள நிலையில், மதுரை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்