"பூமி பூஜை தான்.. ஆனால் AIIMS கட்டுமானத்திற்கு அல்ல..?" புஜைபோட்டு குழப்பியடித்த அதிகாரிகள்

x

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முன்கட்டுமான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக, மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எய்ம்ஸ் மதுரை திட்டம் தென்னிந்தியாவில் முதன்மையான சுகாதாரப் பாதுகாப்புக்கான வாக்குறுதிகளுடன் தொடங்குவதாக குறிப்பிட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு முயற்சி, அதன் முன் கட்டுமான நடவடிக்கைகளை இன்றுமுதல் தொடங்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தில் உள்ள மரம் செடி கொடிகளை அகற்றவே பூமிபூஜை என்றும், கட்டுமானத்துக்காக அல்ல என்றும் வாஸ்துவுக்கு வந்த அதிகாரி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். எய்ம்ஸ் திட்டத்தின் மொத்த கால அளவு கட்டுமானம் தொடங்கிய நாளிலிருந்து 33 மாதங்கள் ஆகும் என்றும் மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை சீர்படுத்தும் பணிகள் மட்டுமே துவங்கவுள்ள நிலையில் கட்டுமானப்பணிகள் எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்