சென்னை பல்கலைக்கழக விவகாரம்.. உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

x

சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, தேடுதல் குழுவை நியமித்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த குழு, 3 பேரை தேர்ந்தெடுத்து, பல்கலைக்கழகவேந்தரான ஆளுநருக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி இடம் பெறவில்லை எனக் கூறி ஜெகன்னாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், பல்கலைகழகத்தின் வேந்தராக முதல்வரை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளதை அரசு தலைமை வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். எந்தெந்த திட்டங்களுக்கு யுஜிசி நிதி உதவி பெறப்படுகிறது என்பது குறித்து அறிக்கை அளிக்க அவகாசம் வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

துணை வேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியை சேர்ப்பது பற்றிய இந்த வழக்கில்,

வேந்தர் பதவி குறித்து தாங்கள் கருத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசு கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை டிசம்பர் 18ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்